ஓட்டப்பிடாரம் அருகேவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதி ஊர்வலம்
ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதி ஊர்வலம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 253-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதியை குறுக்குச்சாலை இருந்து வீரன் சுந்தரலிங்கனார் நிறுவத்தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசபாண்டியன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அந்த ஜோதியை நூற்றுக்கும் மேற்பட்டோர் வாலிபர்கள் ஊர்வலமாக கீழ வேலாயுதபுரம், ராமச்சந்திரபுரம், கீழ மீனாட்சிபுரம், மேல மீனாச்சிபுரம், ஓட்டப்பிடாரம் வழியாக வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்திற்கு இரவு 9.30மணிக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கனார் பேரவை செயலாளர் தேவேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் கண்ணன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் பிரேம் குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சமுத்திரக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.