பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதம்
பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
கடலூர்
பெண்ணாடம்,
பெண்ணாடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் முருகன்குடி அய்யனார்கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவரது வீட்டின் மாடியில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல் மின்னல் தாக்கியதில் அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்விளக்குகள், டிவி, பேன், பிரிட்ஜ் மற்றும் மின் ஒயர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தன. நள்ளிரவில் மின்னல் தாக்கி வீடு மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story