பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டை கடந்து சென்ற குள்ளநரி கூட்டம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டை குள்ளநரி கூட்டம் கடந்து சென்றது
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே குள்ளநரி கூட்டம் ரோட்டை கடந்து சென்றது.
சரக்கு வேன்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, யானை, மான் போன்ற ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிக்கடி அங்குள்ள சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து காய்கறியை ஏற்றிக்கொண்டு மைசூருக்கு சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
குள்ளநரி கூட்டம்
அப்போது ஒரு குள்ளநரி ஒன்று திடீரென ரோட்ைட கடந்து சென்றது. இதை கண்டதும் டிரைவர் அப்படியே தன்னுடைய சரக்குவேனை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் குள்ளநரியை புகைப்படம் எடுத்தார். மேலும் ஏராளமான குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக கூட்டமாக ரோட்டை கடந்து சென்றன. இதை கண்டதும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி ெசல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த அளவுக்கு அதிகமான குள்ளநரிகள் கூட்டமாக ரோட்டை கடந்து செல்வது முதல் முறை என அந்த வழியாக தினமும் சென்று வரும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.