பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் ஆலோசனை


பெரியகுளம் அருகே  ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

தேனி

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து மற்றும் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பண்ணை வீட்டிற்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த சிலரும் வந்தனர். பின்னர் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதேபோல், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story