பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
தேனி
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பவுணர்மி கிரிவலம் நடந்தது. இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தொழில் அதிபர் முத்துகோவிந்தன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுத் தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் பராமரிப்பு குழுவினர் செய்திருந்தனர்.
Next Story