பெரியகுளம் அருகே புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி கூட்டம்
பெரியகுளம் அருகே புரட்சிகர சோசலிஸ்ட கட்சி கூட்டம் நடந்தது
பெரியகுளம் அருகே உள்ள அருளானந்தபுரத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா மற்றும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் தாலுகா அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் அரிகரன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும், பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அருளானந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.