பெருந்துறை அருகே தாய்-மகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டர் கைது


பெருந்துறை அருகே தாய்-மகள் குளிப்பதை செல்போனில்  வீடியோ எடுத்த பெயிண்டர் கைது
x

பெருந்துறை அருகே தாய்-மகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே தாய், மகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

குளிப்பதை வீடியோ..

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 25). பெயிண்டர். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தாய் மற்றும் மகள் ஒருவர் பின் ஒருவராக வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றனர்.

மகள் குளித்து கொண்டிருந்தபோது குளியல் அறையில் உள்ள சுவற்றின் மீது செல்போனை வைத்து, அதன் மூலம் ஜீவானந்தம் வீடியோ எடுத்து கொண்டிருந்ததை கண்டு சத்தம் போட்டார். மகளின் சத்தம் கேட்டு பதறியடித்துக்கொண்டு அவருடைய தாய் ஓடி வந்தார். அப்போது செல்போனுடன் ஜீவானந்தம் அங்கிருந்து செல்வதை கண்டார்.

கைது

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ஜீவானந்தத்தை பிடித்து அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி பார்த்தார். அப்போது அந்த பெண்ணும், அவருடைய மகளும் குளித்து கொண்டிருந்த வீடியோ அதில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்தனர்.


Related Tags :
Next Story