கம்பம் அருகேவாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்சீரமைக்க கோரிக்கை
கம்பம் அருகே வாய்க்கால் கரையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக கம்பம் நகருக்கு சென்று வர இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கம்பம், சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி வழியாக செல்வதை விட கம்பம், சாமாண்டிபுரம் சின்னவாய்க்கால் கரை வழியாக செல்வதற்கு தூரம் குறைவு.
இதன் காரணமாக சாமாண்டிபுரம் சின்ன வாய்க்கால் கரை வழியாக பொதுமக்கள் அதிகம் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த கரையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கரையில் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகு பகுதியில் தண்ணீர் அரிப்பின் காரணமாக திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படுகின்றன. எனவே பொதுப்பணித்துறையினர் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமகக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.