கம்பம் அருகே அரசு பள்ளியில் பூங்கா திறப்பு
கம்பம் அருகே அரசு பள்ளியில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
தேனி
கம்பம் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பபள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவிற்கு அறம் பூந்தளிர் பூங்கா என பெயர் சூட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவாஜி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன், துணை தலைவர் ஜெயா முருகன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் பாரதராணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக தன்னார்வலர் உமர் பாருக் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story