புளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு


புளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon

புளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள மேலபூவாணியில் அக்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த 5 கிராம் தங்க சங்கிலியை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


Next Story