புஞ்சைபுளியம்பட்டி அருகேரோட்டோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்
புஞ்சைபுளியம்பட்டி அருகே ரோட்டோர பள்ளத்தில் அரசு பஸ் பாய்ந்தது
ஈரோடு
கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த நல்லூர் அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே இரு சக்கர வாகனம் சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் ஓரமாக ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் பயணிகள் அனைவரும் வேறு ஒரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அரசு மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story