சாத்தான்குளம் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பழங்குளத்தை சேர்ந்த கிருபைராஜ் மகன் ராஜாசிங் (வயது 32). வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் பழங்குளத்தில் இருந்து ஆனந்தபுரம் நோக்கி ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றார். இதுபோல் ஆனந்தபுரம் தாசன் மகன் சாமுவேல் என்பவர் மற்றொரு ஆட்டோவில் எதிரே வந்தார். கருவேலம்பாடு- பழங்குளம் ரோடு விலக்கில் சென்றபோது இரு ஆட்டோக்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் ராஜாசிங் ஓட்டிச்சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பன்னீர்செல்வம் (80), வேலாயுதம் மனைவி சுந்தர சுப்புலட்சுமி (65), புஷ்பராஜ் மனைவி அமுதா, கருவேலம்பாடு சுப்புலட்சுமி (55) ஆகிய 4பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆனந்தபுரம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.