சாத்தான்குளம் அருகே இடிமின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி
சாத்தான்குளம் அருகே இடிமின்னல் தாக்கி 5 ஆடுகள் பலியாகின.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையில் நேற்று சொக்கலிங்கம் மகன் மந்திரம் என்பவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். மாலையில் திடீரென அப்பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடிமின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகின. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire