சாத்தான்குளம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது


சாத்தான்குளம் அருகே  சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

அம்பலசேரி வடக்குத்தெருவைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி கனகராஜ் (வயது 55). இவரது தோட்டத்தில் எரி சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த மலையாண்டி மகன் ராம்சிங், சந்தனம் மகன் கருப்பசாமி, மந்திரம் மகன் அலெக்ஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். கனகராஜிடம் இருந்து சாராயம், சாராய ஊரல்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர். மேலும் தலைமறைவான ராம்சிங், கருப்பசாமி, அலெக்ஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story