சாத்தான்குளம் அருகே பாம்பு கடித்து சிறுமி சாவு


தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே பாம்பு கடித்து சிறுமி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தேக்கன்குளம் மேல வசப்ப னேரியை சேர்ந்தவர் சுடலைக்கண். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் முருகேஸ்வரி (வயது 7) நேற்று மாலையில் வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அவரை எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. அலறித்துடித்த அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து சாத்தானகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story