சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்-தனியார் பள்ளி பஸ் மோதல்; தொழிலாளி சாவு


சாத்தான்குளம் அருகே  மோட்டார் சைக்கிள்-தனியார்  பள்ளி பஸ் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்-தனியார் பள்ளி பஸ் மோதியவிபத்தில் தொழிலாளி இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம் :

சாத்தான்குளம் அருகே மோட்டார் ைசக்கிளும், தனியார் பள்ளிக்கூட பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

தொழிலாளி

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதாளிகுளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ் (வயது 28). செங்கல்பட்டில் மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் இவர் நேற்று கொம்பன்குளத்திலுள்ள நண்பரின் மகள் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக உவரிக்கு வந்திருந்தார்.

உவரியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, சொந்த ஊரான ஆதாளிகுளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நேருக்கு நேர் மோதல்

சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளிக்கூட பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுரேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நொச்சிக்குளத்தை சேர்ந்த ராயப்பன் மகன் அலெக்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story