சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்


சாத்தான்குளம் அருகே  கல்குவாரி லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் அந்தப்பகுதி விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று கல்குவாரிக்கு செல்லக்கூடிய லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக 3 நாட்களில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என்று கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.


Next Story