சத்தி அருகே 1½ டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


சத்தி அருகே  1½ டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

சத்தி அருகே 1½ டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 29 மூட்டைகளில் 1,450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (வயது 49) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story