சங்கராபுரம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
சங்கராபுரம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுதுறை சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சங்கராபுரம் தாலுகா, மோ.வன்னஞ்சூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பதும், 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story