சங்கராபுரம் அருகேகூரை வீடு எரிந்து சாம்பல்
சங்கராபுரம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பலானது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன்பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சின்னபொண்ணு. இவருடைய கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story