சிவகிரி அருகேபிளேடால் கையை அறுத்து காவலாளி தற்கொலை குடிபோதையில் விபரீதம்


சிவகிரி அருகேபிளேடால் கையை அறுத்து காவலாளி தற்கொலை குடிபோதையில் விபரீதம்
x

சிவகிரி அருகே குடிபோதையில் கையை அறுத்துக்கொண்டு காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

சிவகிரி அருகே குடிபோதையில் கையை அறுத்துக்கொண்டு காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காவலாளி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு குடித்துவிட்டு வந்து போதையில் என்ன செய்வது என்றே தெரியாமல் ஏதாவது செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில்...

இந்த நிலையில் சம்பவத்தன்று இவருடைய மனைவி விஜயா, மகன் நவீன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இரவில் வீட்டுக்கு வந்து உள்ளனர். அப்போது குடிபோதையில் வீட்டில் இருந்த வேல்முருகன், கைகளை பிளேடால் அறுத்து ரத்த ெவள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேல்முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'வேல்முருகன், பிளேடால் கைகளை அறுத்து தற்கொலை செய்து கொண்டது,' தெரியவந்தது.


Next Story