ஸ்பிக் நகர் அருகேசட்ட விழிப்புணர்வு முகாம்
ஸ்பிக் நகர் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஸ்பிக் நகர்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் வறுமை ஒழிப்புத் திட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அருகே ஸ்பிக்நகரை அடுத்துள்ள தவசி பெருமாள் சாலையில் உள்ள அனைத்து தொழில் வியாபாரிகள் சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.ப்ரீத்தா தலைமை தாங்கினார். முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீதிபதி ப்ரீத்தா பேசுகையில், "இலவச சட்டத்திட்டம் பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்பது பற்றியும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 150-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலக பணியாளர் நம்பிராஜன், கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், செல்வன், ஆனந்த் மற்றும் லிஜியா ஆகியோர் செய்திருந்தனர்.