ஸ்ரீவைகுண்டம் அருகேஅப்பன் கோவிலில் கருடசேவை


ஸ்ரீவைகுண்டம் அருகேஅப்பன் கோவிலில் கருடசேவை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே அப்பன் கோவிலில் கருடசேவை நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி கோவில்களின் அருகில் அமைந்துள்ள சுவாமி நம்மாழ்வார் பிறந்த அப்பன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு 5 நாட்கள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவோண நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு திருமஞ்சனம், 8.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி முன்மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயார் ஸ்ரீ தேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடந்தது. தீர்த்தம் மஞ்சள் கயிறு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story