ஸ்ரீவைகுண்டம் அருகே லாரி மோதி மெக்கானிக் பலி


ஸ்ரீவைகுண்டம் அருகே லாரி மோதி மெக்கானிக் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் காளிதாஸ் (வயது 22). இவர் கருங்குளம் அடுத்த சிரியந்தூர் சேரகுளம் செல்லும் சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கருங்குளம் அருகே உள்ள சிரியந்தூரில் இருந்து சேரகுளம் சென்றுவிட்டு மீண்டும் சிரியந்தூருக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் பலத்த காயமைடைந்த காளிதாஸை சேரகுளம் போலீசார் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


Next Story