தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகே ஆண் பிணம்
தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகே ஆண் பிணம்
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த பிடாகம் குச்சிப்பாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே தென்பெண்ணை ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது நெற்றி மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் காயம் இருந்தது. அருகில் ஒரு பசுமாடும் செத்துக்கிடந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு ரெயில்வே தண்டவாள பகுதியில் நடந்து சென்றபோது அந்த சமயத்தில் ரெயில் வந்திருக்கலாம் எனவும், இதனால் அவர் பசுமாட்டை அங்கேயே விட்டுவிட்டு ரெயில்வே பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது இறந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.