தாளவாடி அருகே, பகல் நேரத்தில்தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை


தாளவாடி அருகே, பகல் நேரத்தில்தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை
x
தினத்தந்தி 3 Jan 2023 1:00 AM IST (Updated: 3 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை

ஈரோடு

தாளவாடி அருகே பகல் நேரத்தில் தோட்டத்தில் உலா வரும் காட்டு யானையால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர்.

உணவு- தண்ணீர் தேடி...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களுக்குள் யானைகள் அடிக்கடி புகுந்து அங்கு பயரிடப்பட்டு உள்ள பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

விவசாயிகள் பீதி

கடந்த சில நாட்களாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகனாரை, அருள்வாடி, மெட்டல் வாடி, மரியபுரம், மல்லன்குழி ஆகிய பகுதிகளில் யானைகள் வனப்பகுதியை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மல்லன்குழி கிராமத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்து உள்ளது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதில் ஒரு யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய தோட்ட பகுதியிலே நின்று விட்டது. இந்த யானையானது பகல் நேரத்தில் விவசாய தோட்டம் உள்ள பகுதியிலேயே உலா வருவதால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story