தியாகதுருகம் அருகே விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு


தியாகதுருகம் அருகே  விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வடதொரசலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீபாவளி கொண்டாடும்போது மாணவ, மாணவிகள் சரவெடியை தவிர்க்க வேண்டும். இறுக்கமான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். மின் சாதனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மத்தாப்பு கம்பிகளை கொளுத்திய பிறகு தண்ணீர் நிரம்பிய இரும்பு வாளிகளில் போட வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்தும், பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் கார்த்திகேயன், அருணாச்சலம், ஜெகன் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த போலி ஒத்திகையை செய்து காண்பித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story