தேனி அருகேஆசிரியை வீட்டில் 8½ பவுன் நகை மாயம்


தேனி அருகேஆசிரியை வீட்டில் 8½ பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஆசிரியை வீட்டில் 8½ பவுன் நகை மாயமானது.

தேனி

சென்னை போரூர் சுரேஷ் நகரை சேர்ந்த பிச்சை மனைவி மாணிக்கத்தாள் (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் பழனிசெட்டிபட்டியில் புதிதாக வீடு வாங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தச்சு வேலைகள் பார்ப்பதற்காக முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வந்து பணிகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது மாணிக்கத்தாள் தனது 8½ பவுன் நகைகளை ஒரு கைக்குட்டையில் மடித்து கைப்பையில் வைத்து விட்டு, மாடிக்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது கைப்பையில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீஸ் நிலையத்தில் மாணிக்கத்தாள் புகார் செய்தார். அந்த புகாரில், தச்சுவேலை பார்க்க வந்த தொழிலாளி மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். அதன்பேரில் அந்த தச்சுத்தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story