தேனி அருகேகடையில் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
தேனி அருகே கடையில் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடுபோனது.
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 40). இவர், அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ் மற்றும் மீட்டாய் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோய் இருந்தது.
இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து மோப்பம் பிடித்த படி சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.