திருச்செந்தூர் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் மீனவர் பலி


திருச்செந்தூர் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் மீனவர் பலி
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மீனவர் பலியானார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்ெசந்தூர் அருகே சாலையின் குறுக்கே திடீரென்று நாய் பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மீனவர் பரிதாபமாக பலியானார்.

மீனவர்

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆரெக்ஸ்வெல் (வயது 43). மீனவரான இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் தனுஷ் சேவியர் என்பவருடன் கடந்த மாதம் 31-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வரும் போது இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆரெக்ஸ்வெல் ஓட்ட, தனுஷ் சேவியர் பின்னால் உட்கார்ந்திருந்தார். அடைக்கலாபுரம் அருகே வரும் போது போது திடீரென்று நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் நிலைதடுமாறிய ஆரெக்ஸ்வெல், தனுஷ் சேவியர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆரெக்ஸ்வெல் படுகாயமடைந்தார். தனுஷ்ேசவியர் லேசான காயத்துடன் தப்பினார்.

ஆஸ்பத்திரியில் சாவு

சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த ஆரெக்ஸ்வெல்லை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று ேசர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த ஆரெக்ஸ்வெல்லுக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story