திருச்செந்தூர் அருகே கடற்கரையில் உள்ள நடைபாதை பண்டைய காலத்தில் கட்டப்பட்டதா?


திருச்செந்தூர் அருகே   கடற்கரையில் உள்ள நடைபாதை   பண்டைய காலத்தில் கட்டப்பட்டதா?
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே கடற்கரையில் உள்ள நடைபாதை பண்டைய காலத்தில் கட்டப்பட்டதா? என ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கடற்கரையில் உள்ள நடைபாதை போன்ற அமைப்பு பண்டைய காலத்தில் கட்டப்பட்டதா? என்று ஆய்வு செய்ய பல்கலைக்கழக பேராசிரியர் வலியுறுத்தி உள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர் ஆய்வு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், தொல்லியல் ஆராய்ச்சி மைய இயக்குனருமான சுதாகர் சிவசுப்பிரமணியம் திருச்செந்தூரில் இருந்து புன்னக்காயல் வரை கடற்கரை வழியாக நடந்து சென்று ஆய்வு செய்தார்.

அப்போது திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்துக்கும், ஓடக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு கற்களால் ஆன நடைபாதை போன்ற ஒரு அமைப்பு இருப்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொற்கை துறைமுகம்

அந்த நடைபாதை போன்ற அமைப்பு படிகப்பாறையால் ஆனது. அதன் தடிமன் ஒரு அடிக்குள் இருக்கும். பாண்டியர் காலத்தில் கொற்கை துறைமுகம் மிகவும் சிறப்புற்று விளங்கி உள்ளது. மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகள் நடந்துள்ளன. அத்துடன் கொற்கை துறைமுகம் பகுதிக்கு வெளிநாட்டு பயணிகளும் வந்து சென்றுள்ளனர்.

இதனால் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ள அந்த அமைப்பு நடைபாதையாக பயன்படுத்தப்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை. அதை பார்க்கும்போது மனிதர்களால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.

பண்டைய காலத்தில் கட்டப்பட்டதா?

ஒருவேளை பண்டைய காலத்தில் கட்டப்பட்டு வாய்ப்புகள் உள்ளது. எனவே, தொல்லியல் துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதுகுறித்து தகவல் தெரிவித்தால் தமிழனின் பாரம்பரியம், பண்பாடுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story