டி.என்.பாளையம் அருகேகஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைதுகார்- 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கார்- 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
டி.என்.பாளையம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். கார்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா
டி.என்.பாளையம் டி.ஜி.புதூர் காளியூர் பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் டி.ஜி.புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரில் கஞ்சா கடத்தியதாக ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் பெருமுகை கிராமம் அருகே வரப்பள்ளத்துக்கு சென்று பவானி எலவமலை அண்ணாநகரை சேர்ந்த பிச்சமுத்து என்பவர் மகன் ராஜசேகரன் (47), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள புதுபள்ளிபாளையம் தியேட்டர் வீதி மரக்கல்காடு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கிருபாகரன் (28), பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசு புளிக்கார தோட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் பிரகாஷ் என்கிற ஜெயபிரகாஷ் (34) ஆகியோரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.
நடித்து பிடித்தனர்
அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கைதான 3 பேரில் ஒருவரின் உதவியுடன் பங்களாப்புதூர் போலீசார் கஞ்சா வாங்குபவர்கள் போல் நடித்து வரப்பள்ளம் அருகே உள்ள இரட்டை பாலம் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்க வந்த கிருபாகரன், ஜெயபிரகாஷ், ராஜசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுவரை கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா, 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.