தூத்துக்குடி அருகே 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி அருகே 520 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சேரக்குளம் ராமானுஜம்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு மினிவேனை போலீசார் மடக்கினர். உடனடியாக அந்த வேன் டிரைவர், வேனை நிறுத்திவிட்டு ஓடிவிட்டாராம். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனை செய்தபோது, அதில் 40 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் சுமார் 520 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மினிவேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் நாங்குநேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story