தூத்துக்குடி அருகே லாரியில் ரேஷன் அரிசிகடத்திய வாலிபர் கைது


தூத்துக்குடி அருகே  லாரியில் ரேஷன் அரிசிகடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே லாரியில் ரேஷன் அரிசிகடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். லாரியில் இருந்த 760 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஓட்டப்பிடாரம் சிலோன்காலனி பஸ் நிறுத்தம் முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒரு மினி லாரியை மடக்கி நிறுத்தினர். அப்போது லாரியில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்தியபோது, ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை கடத்தி செல்வது தெரிய வந்தது. அதில் இருந்த சுமார் 760 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக, கங்கைகொண்டான் பஜார் தெருவை சேர்ந்த செல்வசூரியா (வயது 24) என்பவரை கைது செய்தார். இந்த ரேஷன் அரிசியை எங்கிருந்து கடத்தி வந்தனர்? இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நெல்லை பள்ளிக்கோட்டையை சேர்ந்த வடிவேலு என்பவரை தேடி வருகிறார்.


Next Story