தூத்துக்குடி அருகே2 மோட்டார் சைக்கிள்கள் ேமாதல்;துறைமுக தொழிலாளி பலி


தூத்துக்குடி அருகே2 மோட்டார் சைக்கிள்கள் ேமாதல்;துறைமுக தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் துறைமுக தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் துறைமுக கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

துறைமுக தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திராநகரை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 32). துறைமுக கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து சாயர்புரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

மோட்டார் ைசக்கிள்கள் மோதல்

புதுக்கோட்டை அருகே சென்றபோது, கீர்த்திவாசன் மோட்டார் ைசக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீர்த்திவாசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதேபோன்று மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் (27), செந்தில், பாலமுகேஷ் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

சாவு

அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 4 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் கீர்த்தவாசன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்ற 3 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று கீர்த்திவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story