தூத்துக்குடி அருகேரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


தூத்துக்குடி அருகேரேஷன் கடைகளில் கலெக்டர்  திடீர் ஆய்வு
x

தூத்துக்குடி அருகே ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து கார்டுதார

ஆய்வு

தூத்துக்குடி அருகே உள்ள காமராஜ் நகர் ஹவுசிங் போர்டு, மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று சென்றார். அங்கு அனைத்து பொருட்களும் நல்லமுறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா, என்பது குறித்து பணியாளர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். கார்டுதாரர்களுக்கு தடையின்றி அனைத்து ரேஷன் பொருட்களும் நல்லமுறையில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கடன் உதவி

தொடர்ந்து மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி சார்பில் புதிதாக தொழில் தொடங்க 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் தொழில் கடன் உதவியை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அலுவலர் அபுல் காசிம், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story