தூத்துக்குடி அருகேஓய்வு பெற்ற மின்ஊழியருக்கு அரிவாள் வெட்டு


தூத்துக்குடி அருகேஓய்வு பெற்ற மின்ஊழியருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே உள்ள எம்.சவேரியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 72). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய வீட்டிற்கு அருகே பிரகாஷ் என்பவர் சோலார் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனிக்கு முத்தையாபுரம் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவியை சுந்தர்ராஜன் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இந்த நிலையில் பிரகாஷூக்கும், மாடசாமியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்ட சுந்தர்ராஜனை நேற்று முன்தினம் அவதூறாக பேசி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த சுந்தர்ராஜன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடசாமியை கைதுசெய்தனர்.


Next Story