தூத்துக்குடி அருகேவீடு புகுந்து நகை, பணம்கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் தவசிபெருமாள் சாலையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பபிதா (வயது 45). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் பணம், ரூ.1லட்சம் மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், 12 கிராம் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த வீட்டில் கைவரிசை காட்டியது முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஐலோன் சரவண குமார் மகன் சண்முகராஜ் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story