தூத்துக்குடி அருகே சங்குகுளி தொழிலாளி நடுக்கடலில் திடீர் சாவு


தூத்துக்குடி அருகே சங்குகுளி தொழிலாளி நடுக்கடலில் திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சங்குகுளி தொழிலாளி நடுக்கடலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்குகுளி தொழிலாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.

சங்குகுளித்தல்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் முத்துச்சாமி (வயது 43). இவர் நேற்று காலை 8.30 மணிக்கு வேம்பாரில் இருந்து சங்குகுளிக்க சென்றாராம். இவருடன், தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர்காலனியைச் சேர்ந்த முனியசாமி (35), ரூடல் (40), வினோத் (30), காட்சன் (22), குருசாமி (25), ஹெமில்டன் (40), கருப்பட்டி (40) ஆகிய 7 பேரும் சங்குகுளிக்க சென்றனர்.

சாவு

அவர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல்மைல் தொலைவில் சங்குகுளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது படகின் மேல் பகுதியில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த முத்துச்சாமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சக தொழிலாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். பின்னர் முத்துச்சாமியை மீட்டு வேம்பார் கடற்ரைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story