தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம்


தூத்துக்குடி அருகே  சிலம்பம் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமண் புனித வளன் தொடக்க பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வீரத்தமிழன் போர்க்கலை சிலம்ப கூடம் செயலாளரும், தலைமை ஆசானுமான ஆ சுடலை மணி, பயிற்சியாளர் ஆ.வெள்ளையராஜா ஆகியோர் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மேலும் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வருகிற 9-ந் தேதி தேனி மாவட்டம் சின்னம்மனூரில் நடைபெற உள்ள சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.


Next Story