தூத்துக்குடி அருகே தொழிலாளி தற்கொலை


தூத்துக்குடி அருகே  தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முருகேசன் (வயது 34). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவி முனீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த முருகேசன் வீட்டின் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். அதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story