உப்புக்கோட்டை அருகேகால்நடைகளுக்கான மருத்துவ முகாம்


உப்புக்கோட்டை அருகேகால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:47 PM GMT)

உப்புக்கோட்டை அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

தேனி

உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியில் கால்நடை சுகாதாரம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆடு, மாடு, கோழிகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை நோய் புலனாய்வு குழுவினர், அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனை செய்தனர். முடிவில் கால்நடை பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு வரும் தோல் கழலை நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story