உத்தமபாளையம் அருகே ஓடும் காரில் தீ
உத்தமபாளையம் அருகே ஓடும் காரில் தீப்பிடித்தது
தேனி
சீலையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவரது, தனது குடும்பத்தினர் உள்பட 3 பேருடன் ராயப்பன்பட்டியில் இருந்து காரில் சீலையம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். உத்தமபாளையம் அருகே பழைய தென்னன்சாலை தனியார் நர்சரி கார்டன் அருகே வந்தபோது திடீரென காரில் இருந்து புகை கிளமபியது.
இதையடுத்து சதீஷ்குமார் காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்தவா்கள் உடனடியாக இறங்கினர். இந்நிலையில் கார் தீப்பற்றி எரிந்து எலும்புகூடானது. காரை விட்டு 4 பேரும் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story