வானரமுட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம்


வானரமுட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வானரமுட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

வானரமுட்டி அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார்.

பள்ளி மாணவர்

வானரமுட்டி அருகே உள்ள கல்லூரணி நடு தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் குரு(வயது 16). இவர் வானர முட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்வதற்காக காலையில் கல்லூரணியில் இருந்து குருவிகுளம் - கோவில்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்துள்ளார்.

தவறி விழுந்தார்

வானரமுட்டி அருகே சென்றபோது, நிலை தடுமாறிய அவர் பஸ்சில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை

தினமும் இந்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி விபத்து அபாயத்தில் பயணம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது. எனவே மாணவர்களின் நலனைகருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் இப்பகுதியில் கூடுதலாக பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story