வருசநாடு அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது
வருசநாடு அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தேனி
வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சீலமுத்தையாபுரம் வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக கையில் பையுடன் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர் வைத்திருந்்த பையை சோதனை செய்தனர்.
அப்போது பையில் மான் இ்றைச்சி இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர், வருசநாடு அருகே வீரசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அழகுசாமி (வயது 41) என்பதும், வனப்பகுதியில் நாய்கள் கடித்து இறந்து கிடந்த மானின் இறைச்சியை சமைப்பதற்காக பையில் மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story