வீரபாண்டி அருகேவங்கி ஊழியர் வீட்டில் திருட்டு


வீரபாண்டி அருகேவங்கி ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே வங்கி ஊழியர் வீட்டில் திருடுபோனது.

தேனி

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சங்கீதா (வயது 24). கடந்த மாதம் 27-ந்தேதி சங்கீதா பீரோவில் இருந்த நகையை எடுத்து பார்த்துவிட்டு பூட்டி வைத்தார். இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இவர், பீேராவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 2½ பவுன் நெக்லஸ், 1½ பவுன் தங்க சங்கிலி என 4 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story