வேப்பூர் அருகே பெயிண்டரை கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
வேப்பூர் அருகே பெயிண்டரை கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சுமணி மகன் ஆறுமுகம்(வயது 49). பெயிண்டர். இவருடைய மனைவி தீபா(39). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். தீபாவுக்கும் ஆறுமுகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தீபா மற்றும் அவருடைய குழந்தைகள் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபா மற்றும் மகன், மகளை கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகளின் கள்ளக்காதலனான அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் விஜயகுமார் (வயது 24) என்பவருக்கும் இக்கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.