விளாத்திகுளம் அருகே கஞ்சி கலயம் ஊர்வலம்


விளாத்திகுளம் அருகே  கஞ்சி கலயம் ஊர்வலம்
x

விளாத்திகுளம் அருகே கஞ்சி கலயம் ஊர்வலம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆன்மிககுரு அம்மா 82வது பிறந்த நாள் விழா, மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை, விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சிக்கலய ஆன்மிக ஊர்வலம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. சக்தி மன்ற கொடியை மன்ற பொருளாளர் ராஜதுரை ஏற்றி வைத்தார். இயற்கை சீற்றம் தணிந்து அளவான மழை வேண்டி நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். மன்ற தலைவர் விஜயலெட்சுமி முன்னிலையில் மாவட்ட மகளிர் அணி தலைவி பத்மாவதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ஏராளமானோர் கஞ்சிகலயம் சுமந்து சென்றனர்.


Next Story