விளாத்திகுளம் அருகேவீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
விளாத்திகுளம் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வேம்பார் தென்மயிலை நகரில் கோவில் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் அருகருகே அமைந்துள்ளன. இந்தநிலையில் கோவிலைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு கிறிஸ்தவ ஆலய தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கோவில் நிலத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்கலாம் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து கோவிலைச் சுற்றிலும் நில அளவீடு செய்வதற்கு வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது நில அளவீடு செய்வதற்கு கிறிஸ்தவ ஆலய தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகத்தினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி உள்ளனர்.
Related Tags :
Next Story