விளாத்திகுளம் அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
விளாத்திகுளம் அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 63 மெகாவாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மின் உதவி செயற்பொறியாளர் முத்துராஜ், விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75- ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடந்தது. போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவி சாகித்யா மரங்கள் மக்கள் இயக்கத்திற்கு தான் சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை மார்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் வழங்கினார். மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஆபிரகாம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், பள்ளி ஆசிரியை அமராவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.